6 ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கு நெல் கொள்முதல்!

#SriLanka #rice #Lanka4
Mayoorikka
2 hours ago
6 ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கு நெல் கொள்முதல்!

விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 இந்த செயற்பாடுகளுக்காக, 6 ஆயிரம் மில்லியன் ரூபாயிற்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

 அத்துடன், அவசியம் ஏற்படும் நிலையில், மேலும் நெல்லை கொள்வனவு செய்வதற்குத் தயாரென நெல் சந்தைப்படுத்தல் சபையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ நெல்லை 120 ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா நெல்லை 125 ரூபாயிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல்லை 132 ரூபாயிற்கும் நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்முதல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!