மின்சாரம் தொடர்பில் வெளியான அதி விசேட வர்த்தமானி!

இலங்கையில் மின்சார விநியோக தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் பிரிவு 2ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது, சாதாரண பொது வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் சேவைகள் தொடர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது, தற்போது இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தும் வேலைநிறுத்த நடவடிக்கைகளால் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடனும் வெளியிடப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்து கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



