அனுரகுமார நாட்டை பொறுப்பெடுத்து இன்றுடன் 1வருடம் நிறைவு

#SriLanka #Sri Lanka President #Lanka4
Mayoorikka
2 hours ago
அனுரகுமார நாட்டை பொறுப்பெடுத்து இன்றுடன் 1வருடம் நிறைவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாட்டை பொறுப்படுத்து இன்ருதம் ஒருவரிடங்கள் பூர்த்தியாகியள்ளது.இதுவரை அவர் செய்த நடவடிக்கைகள் வருமாறு:

 அனுரகுமார நாட்டை பொறுப்பெடுத்து இன்றுடன் 1வருடம் நிறைவு..

  டிஜிட்டல் மயமாக்கல் துறை

  •  1. தேசிய இணைய பாதுகாப்பு தலைமையகம் தொடக்கம்.
  •  2. டிஜிட்டல் மாற்றுத் திட்டங்களுக்கு GovTech (பி.வி.டி) லிமிடெட் நிறுவல்.
  •  3. அரசுத் துறைகளுக்கு செலுத்தப்படும் பணப்பரிவர்த்தனைகளை GOVPAY செயலி மூலம் ஊக்குவித்தல்.
  •  4. E-கோர்ட் திட்டத்தின் முதல் படியாக உச்சநீதிமன்றத்தை டிஜிட்டல் மயமாக்கல்.
  •  5. 18 அரசுத் துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பெற “Single Window” பைலட் திட்டத்தை அறிமுகப்படுத்தல்.
  •  6. தனியார் தரவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்.
  •  7. வெளிநாட்டு இலங்கையர்கள் பிறப்பு, திருமணம், இறப்பு சான்றிதழ்களை உடனடியாக தங்கள் நாட்டின் தூதரகங்கள் மூலம் பெறக்கூடிய டிஜிட்டல் வசதி அறிமுகம்.
  •  8. BCC இலங்கை லிமிடெட் டிஜிட்டல் மயமாக்கல்.
  •  9. ஓய்வூதியத்துறை டிஜிட்டல் மயமாக்கல்.
  •  10. உள்ளூர் மட்டத்தில் ஜனாதிபதி நிதி சேவைகள் மற்றும் ஒன்லைன் பதிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தல்.


 போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை:

  •  11. புறக்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் மருதானை ரயில் நிலையம் புதுப்பிப்பு ஆரம்பம்.
  •  12. கடவத்த – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானம் மீண்டும் தொடக்கம்.
  •  13. தேசியப் பயணக் கமிஷன் சட்டத்தில் திருத்தம்.
  •  14. தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இணைந்து சேவை வழங்கும் திட்டம் தொடக்கம்.
  •  15. பேருந்துகளில் GPS தொழில்நுட்பம் சேர்த்தல் ஆரம்பம்.
  •  16. போக்குவரத்து அபராதங்களை GOVPAY செயலி மூலம் செலுத்தும் வசதி தொடக்கம்.
  •  17. அதிவேக நெடுஞ்சாலையில் கார்ட் மூலம் பணம் செலுத்தும் வசதி தொடக்கம்.
  •  18. பயணச்சீட்டு மோசடியைத் தடுக்க, ரயில் சீட்டுகளை அடையாள அட்டை எண்/கடவுச்சீட்டு எண் மூலம் சரிபார்த்தல்.
  •  19. இலங்கை போக்குவரத்தில் 200 புதிய பேருந்துகள் சேர்த்தல்.
  •  20. தேவையற்ற வகையில் மூடப்பட்ட சில சாலைகளை மீண்டும் திறத்தல்.

 விவசாயம் மற்றும் மீன்வளத்துறை:

  •  21. தேங்காய் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கல் மற்றும் ரூ. 50 இலட்சம் வரை கடனுதவி. 
  • 22. விவசாயத் தொழில் முனைவோருக்கு 4% வட்டியுடன் கடனுதவி வழங்கல்.
  •  23. 25 இலட்சம் தேங்காய் நடவு திட்டம் தொடக்கம். 
  • 24. யானைக் கடத்தல் பாதைகள் மறைக்கப்பட்ட சட்டவிரோத நிலங்களை அகற்றுதல். 
  • 25. அரிசி சந்தைப்படுத்தல் வாரியம் மீண்டும் செயலில் கொண்டுவரல் மற்றும் சேமிப்பு வசதி புதுப்பித்தல். 
  • 26. சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு 50 இலட்சம் வரை கடனுதவி. 
  • 27. மீனவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டது. 
  • 28. பேரிடரில் உயிரிழப்புக்கான இழப்பீடு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டது. 
  • 29. விவசாய உரம் மானியம் ரூ. 25,000-க்கு மேல் உயர்த்தப்பட்டது. 
  • 30. எரிபொருள் மானியம் மற்றும் சிறிய படகு உரிமையாளர்களுக்கு மாதம் ரூ. 9375 வழங்குதல். 
  • 31. அனைத்து மானியங்களையும் நேரடியாக வங்கி கணக்குகளில் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தல்.

வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத்துறை: 

  • 32. சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் Kingdom of Kotte திட்டம் தொடக்கம். 
  • 33. வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டம். 
  • 34. யாழ்ப்பாணத்தில் புதிய சுற்றுலா அலுவலகம் திறத்தல். 35. E8 விசா பணமில்லா முறையில் வழங்கல் தொடக்கம்.
  •  36. வெளிநாட்டு வேலை புகார் விசாரணைக்காக சிறப்பு காவல் பிரிவு அமைத்தல். 
  • 37. கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா VAT வரி மீளளிப்பு அலுவலகம் தொடக்கம். 
  • 38. குறைந்த வருமானக் குடும்பங்களில் இருந்து 50,000 இளம் பெண்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு திட்டம். 39. ரயில்களில் யானை விபத்துகளை குறைக்க சோலார் கேமரா அமைப்புகள் பொருத்தல்.
  •  40. நிறுத்தப்பட்ட வேளாண் வேலை வாய்ப்புகளை மீண்டும் தொடக்கம்.
  •  41. பாஸ்போர்ட் வழங்கல் தினசரி 4000 ஆக அதிகரிக்க, 24 மணி நேர சேவை தொடக்கம். 
  • 42. VFS விசா முறையை நிறுத்தி, பழைய விசா முறையை மீண்டும் கொண்டு வந்து, ஆன்லைன் பாஸ்போர்ட்/விசா விண்ணப்ப வசதி அறிமுகம். 

 சுகாதாரத்துறை: 

  • 43. NMRA சப்ளையர்கள் பதிவு செய்யும் போது மருந்து விலையை குறைக்கும் முறை. 
  • 44. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை பெரு நாட்டிற்கு ஏற்றுமதி தொடக்கம். 

தொழில், தொழில் முனைவு மற்றும் வீட்டு வசதித்துறை: 

  • 45. கம்பனி சட்டத்தில் திருத்தம். 
  • 46. ஃப்ரீலான்சர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடனுதவி (BOC மூலம்). 
  • 47. சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ. 5 லட்சம் – 250 லட்சம் வரை பிணையில்லா கடனுதவி (NCGIL மூலம்). 
  • 48. சர்வதேச தரச்சான்றிதழ்களைப் பெற சிறு, நடுத்தர தொழில்களுக்கு சலுகைகள்.
  •  49. தொழில்துறை அமைச்சகங்கள் – BOI, IDB, MOI நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் முறையை உருவாக்கல். 
  • 50. மலைப்பகுதி மக்களுக்கு வீட்டு திட்டம் – குடியிருப்பு, 10 பர்ச் நிலம் வழங்கி வீடு கட்டும் திட்டம். 
  • 51. வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் தொடக்கம்.
  •  52. ஒட்டுச்சுட்டான் பிளேட் தொழிற்சாலை மீண்டும் தொடக்கம். 
  • 53. அழிமங்கட சாம்பல் தொழிற்சாலை மீண்டும் தொடக்கம்.

 நீதித்துறை மற்றும் சட்டத்துறை:

  •  54. குற்றவியல் வழக்குச் சட்டத்தில் திருத்தம் செய்து, சந்தேகநபர்களுக்கு ஆன்லைனில் சான்றுகள் வழங்கும் முறை அறிமுகம். 
  • 55. குற்றத்தால் கிடைத்த வருமான சட்டத்தில் திருத்தம். 
  • 56. முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் தொடர்பான சட்டத்தில் திருத்தம்.
  •  57. புதிய Disruption Standards Act அறிமுகம். 

 நிதி மற்றும் திட்டங்கள்துறை: 

  • 58. பால், தயிருக்கு VAT நீக்கம். 
  • 59. சேவை ஏற்றுமதி வரியை 30% இலிருந்து 15% ஆக குறைத்தல்.
  •  60. வருமான வரி விதிக்கும் வரம்பு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. 
  • 61. புதிய உள்நாட்டு வருமானச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. 62. வாகன இறக்குமதி சரியான முறையில் மீண்டும் தொடக்கம். 
  • 63. 4 இலட்சம் விவசாயிகளை மீண்டும் பயிர் திட்டத்தில் சேர்த்தல்.
  •  64. மாற்றுத்திறனாளி மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான உதவி ரூ.10,000 ஆக உயர்வு. 
    • 65. முதியோர் உதவி ரூ.5,000 ஆக உயர்வு. 

குழந்தைகள் மற்றும் கல்வித்துறை: 

  • 66. 2026 முதல் கல்வி சீர்திருத்தம் நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பு. 
  • 67. முன்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு – உதவி ரூ.60 இலிருந்து ரூ. 100 ஆக உயர்வு.
  •  68. சிறுவர் பாதுகாப்பு மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ. 5000 வைப்பு; திருமணத்தின் போது வீடு கட்ட ரூ. 10 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துதல். 
  • 69. பள்ளி மாணவிகளுக்கு மாதம் 8 சுகாதாரத் துணிகள் வழங்கல். 
  • 70. பள்ளி மாணவர்களுக்கு ரூ. 6000 வழங்கல். 

  விளையாட்டுத்துறை: 

  • 71. யாழ்ப்பாணத்தில் புதிய சர்வதேச விளையாட்டு மைதான கட்டுமானம் தொடக்கம்.
  •  72. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் 900 மாணவர்களுக்கு மாதம் ரூ. 10,000 வழங்கல். 

  ஆற்றல் துறை:

  •  73. மின்சாரச் சட்டத்தில் திருத்தம். 

 அரசு மற்றும் நிர்வாகத்துறை: 

  • 74. 3 மசோதாக்கள் திருத்தம் – குறைந்தபட்ச சம்பளம் ரூ. 30,000 ஆக உயர்வு. 
  • 75. அரசுத் துறைகளில் ஊழலைத் தடுக்கும் பிரிவுகள் அமைத்தல்.
  • 76. தனியார் துறையில் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ. 9500 மற்றும் தினசரி கூலி ரூ.380 உயர்வு. 
  • 77. அரசுப் பணியாளர்களின் சம்பள உயர்வு. 
  • 78. இராஜாங்க அமைச்சர் பதவி நீக்கம். 
  • 79. ஜனாதிபதி அதிகாரப்பூர்வ வீடுகள் 2 ஆக மட்டுப்படுத்தல்; அமைச்சர்களுக்கு வீடு வழங்கப்படமாட்டாது.
  •  80. தகுதியின்றி நியமிக்கப்பட்ட தூதர்களை மீண்டும் அழைத்து ஆய்வு செய்தல். 
  • 81. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான பாதுகாப்புகளை நீக்கி, தேவையான பாதுகாப்பு மட்டும் வழங்கல். 
  • 82. அரசுத்துறை வாகனங்களை எரிபொருள் செலவு குறைக்கும் வகையில் ஏலத்தில் விற்பனை. 
  • 83. அமைச்சர்களுக்கு அனுமதி (பேர்மிட்) வழங்கும் முறையை நிறுத்தல்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!