கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் 17 மில்லியன் ரூபா செலவில் புதிய நவீன நூலகம் திறப்பு!!

கரைச்சிபிரதேச சபை வலிமையாகவும் தான் சார்ந்த பிரதேசத்தின் சுயாட்சி விழுமியங்ளை இழந்து விடாது அதனை பாதுகாப்பதுடன் அதற்காக போராடுகின்ற சபையாகவும் திகழ்கிறது என கரைச்சி பிரதேச செயலர் திருவாளர் முகுந்தன் புகழாரம்.
கரைச்சி பிரதேச சபையின் உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் விசேட நிகழ்வாக சுமார் 17 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வளங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்ட ஸ்கந்தபுரம் பிரதேசத்திற்கான முற்றிலும் கணினி மற்றும் இணைய வலை அமைப்புகள் உடன் கூடிய புதிய நூலகம்திறந்து வைக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச செயலாளர் மதிப்பார்ந்த தவச்செல்வம் முகுந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூலகத்தினை திறந்து வைத்தார் .கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கௌரவ உறுப்பினர்கள் மேனாள் கௌரவ உறுப்பினர்கள் அதிபர்கள் சமூக அமைப்புக்கள் பள்ளி பிள்ளைகள் கலந்து கொண்டு முற்றிலும் நவீன வசதிகளை கொண்ட இந்த நூலகத்தை திறந்து வைத்தமை மகிழ்ச்சியானதாக அமைந்தது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



