கனடாவின் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் பதவி விலகல்

கனடாவின் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், தனது அமைச்சுப் பொறுப்பை விட்டு விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சுப் பதவியை துறந்து உக்ரைனுக்கான சிறப்பு தூதர் போன்ற பொறுப்புக்கு நியமிக்கப்பட உள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு நம்பகமான மூலங்கள், இந்தப் பொறுப்பு சிறப்பு தூதர் நிலைக்கு ஒத்ததாக இருக்கும் என்றும், இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளன.
ஃப்ரீலாண்ட் உக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளராக இருந்த தனது இருபது ஆண்டு காலத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் வசித்த அனுபவமும் அவருக்கு உள்ளது.
கடந்த வாரம், அவர் கனடா தூதர் நடால்கா ஸ்மோக், முன்னாள் பிரதமர் ஜீன் க்ரெட்யென், முன்னாள் நியூஃபவுண்ட்லாண்ட் & லாப்ரடார் முதல்வர் ஆண்ட்ரூ ஃப்யூரி ஆகியோருடன் உக்ரைனைப் பார்வையிட்டார்.
2013ல் பத்திரிகையாளராக இருந்த ஃப்ரீலாண்ட் அரசியலுக்கு வந்தார், டொராண்டோ மத்திய தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
2015 தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றபோது, அவர் சர்வதேச வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
(வீடியோ இங்கே )



