கையகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
#SriLanka
#government
#House
Mayoorikka
2 hours ago

முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து மீண்டும் கையகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்க அலுவலகங்களாகவோ அல்லது வருவாய் ஈட்டும் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தக் கட்டிடங்கள் பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும் வகையில் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவை நிதி அமைச்சு எடுக்க உள்ளது.
அரசாங்க நிதியில் பராமரிக்கப்படும் இந்த சொத்துக்களை பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் முதலீடுகளுக்குப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும், முன்னர் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே இருந்த இந்த மதிப்புமிக்க வீடுகளை, முழு மக்களுக்கும் பயனளிக்கும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது மக்களின் வெற்றி என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



