பேருந்துகளுக்கு கட்டாய பரிசோதனை - போக்குவரத்து திணைக்களம்

#SriLanka #Accident #government #Bus
Prasu
4 days ago
பேருந்துகளுக்கு கட்டாய பரிசோதனை - போக்குவரத்து திணைக்களம்

இலங்கை அரசாங்கம் நீண்ட தூர பேருந்துகள் அனைத்தையும் பயணத்துக்கு முன் கட்டாய அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளது. இது எதிர்வரும் மாதம் (ஒக்டோபர் 2025) முதல் அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை மற்றும் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்பார்வையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

நீண்ட தூர சுற்றுலா பேருந்துகளும் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் அவை அங்கீகரிக்கப்படாது. 100 கிலோமீற்றருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகள், பயணத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். 

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இதற்கான வழிமுறைகளை சுற்றறிக்கை மூலம் வெளியிட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவாக்க, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வாகன பழுதுபார்க்கும் இடங்களை ஆய்வு செய்து, தகுதிச் சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமளிக்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த செயல்முறையை நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!