கனேடிய கசினோ நிறுவனம் மீது $1.2 மில்லியன் அபராதம் விதிப்பு
கனடாவில் இயங்கி வரும் கசினோ நிறுவனம் ஒன்றின் மீது 1.2 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பணமோசடி கண்காணிப்பு அமைப்பு FINTRAC, சஸ்கட்செவான் இந்திய கேமிங் ஆணையத்தின் மீது இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததற்காக அபராதம் விதித்துள்ளது. சஸ்கட்செவான் இந்திய கேமிங் ஆணையம் சஸ்கட்செவானில் ஏழு கேசினோக்களை நடத்தி வருகிறது.
சந்தேகப்படும் பரிவர்த்தனைகளை முறையாக அறிவிக்கவில்லை, அவற்றுக்கான தேவையான தகவல்களை வழங்கவில்லை, மேலும் எழுத்துப்பூர்வமான ஒழுங்குமுறை கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கி அமல்படுத்தவில்லை என நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கசினோ நிறுவனம் தனது அறிக்கையில், இந்த அபராதம் நிர்வாகச் சீர்கேடு காரணமாக மட்டுமே விதிக்கப்பட்டது, எந்த நிதி குற்றங்களும் அதன் கேசினோக்களில் நடைபெறவில்லை என வலியுறுத்தியுள்ளது.  
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
                        
                    
                        
                    
                        
                    
                        
                    
                
                
                
                
                
                                    