வெலிகம, தெனிபிட்டிய சந்திப் பகுதியில் வாகன விபத்து - பெண் ஒருவர் பலி!
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

வெலிகம, தெனிபிட்டிய சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிகமவிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிச் சென்ற லொறி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயங்களுடன் வாலனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் தெனிபிட்டிய, நிடங்கல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



