யாழ் சக்கோட்டையில் இளம் ஆசிரியர் உயிரிழப்பு!
#SriLanka
#Death
#Hospital
Mayoorikka
1 month ago
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் ஆசிரியர் நேற்று உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையை சொந்த இடமாககொண்ட குறித்த ஆசிரியர் சக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்து மூன்று வயதில் மகளுடன் சக்கோட்டையில் வாழ்ந்து வரும் நிலையில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குகாசினி நிஷாந்தன் வயது 37என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
இறுதிரிக்கிரியைகள் திருகோணமலையில் இன்று இடம் பெறவுள்ளது
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
