இந்தியாவில் இருந்து முதன்முறையாக பலாலிக்கு வந்த மருத்துவ விமானம்! இருவர் பயணம்

#SriLanka #Jaffna #Airport
Mayoorikka
1 month ago
இந்தியாவில் இருந்து முதன்முறையாக பலாலிக்கு வந்த மருத்துவ விமானம்! இருவர் பயணம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக JIA மருத்துவ விமானசேவை இன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. 

 இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து ஒரு சிறப்பு MEDEVAC விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

 விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் , விமான நிலையத்திலிருந்து இரண்டு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.

 மருத்துவ விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து பலாலி சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள பதிவில் உள்ளதாவது, இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து ஒரு சிறப்பு MEDEVAC விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 

 குறித்த விமானம் சர்வதேச மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும். மேலும் இலங்கை - இந்திய எல்லைகளுக்கு அப்பால் பாதுகாப்பான, தடையற்ற பராமரிப்பை உறுதி செய்வதிலும் பெருமை கொள்கிறோம். - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!