ரஷ்ய படையினர் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த கனடியர்

#Death #Canada #War #Soldiers #Russia Ukraine
Prasu
3 hours ago
ரஷ்ய படையினர் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த கனடியர்

கனடாவின் நியூ பிரவுன்சிக் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உக்ரேனில் உயிரிழந்துள்ளார். போரில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய படையினர் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் குறித்த கனடியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 24 வயதான பெட்ரிக் மஸேரொல் என்ற இளைஞரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு விடுமுறைக்காக செல்வதாக கூறி குடும்பத்தினரிடம் விடை பெற்று சென்றதாக அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார். ஆனால் உண்மையில் குறித்த நபர் போலந்து வழியாக உக்ரைன் சென்று போரில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் அவர் இவ்வாறு போரில் இணைந்து கொண்டு உயிர்த் துறந்துள்ளார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

கனடிய ராணுவத்தில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார். தனது மகனின் உடலை பெற்றுக்கொள்ள உதவுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்களது நம்பிக்கைகளின் பிரகாரம் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள விரும்புவதாக உயிரிழந்தவரின் தந்தையான மார்க் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!