கனடாவின் கான்செப்ஷன் பே சவுத் நகரில் அவசர நிலை அறிவிப்பு

கனடாவின் நியூஃபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடாரின் தலைநகரான செயிண்ட் ஜான்ஸ் அருகே அமைந்துள்ள கான்செப்ஷன் பே சவுத் நகரில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 27,000 மக்கள்தொகையுள்ள நகரம் விரைவில் குடிநீரின்றி திணறக்கூடும் என நகர மேயர் டாரின் பென்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். நகருக்குள் தண்ணீர் விநியோகம் செய்யும் முக்கிய குழாய் உடைந்ததால் கையிருப்பு நீர் வேகமாக குறைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நகராட்சி அவசரநிலை அறிவித்து, அனைத்து வணிக நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் குடிமக்கள் அவசர தேவைகளுக்கு அப்பாற்பட்ட எதற்கும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம் என கோரியுள்ளது.
தீ விபத்து போன்ற சூழ்நிலைகளுக்காக அண்டை நகராட்சிகள் தண்ணீர் டேங்கர் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக பென்ட் தெரிவித்துள்ளார்.
உடைந்த குழாயை எப்போது சரி செய்ய முடியும் என்பது தெளிவாக தெரியவில்லை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



