கல்முனை மாநகர சபை காவலாளி ஊழியர் விபத்தில் உயிரிழப்பு!
#SriLanka
#Accident
#Lanka4
Mayoorikka
2 months ago
கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மருதமுனையில் இடம்பெற்ற விபத்தில் கடமை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த கல்முனை மாநகர சபை காவலாளி உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கல்முனை மாநகர சபையில் காவலாளியாக கடமை புரிந்த பாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
கடமை முடிந்து பெரியநீலாவணையில் உள்ள தனது வீடு நோக்கி செல்கையிலே அவர் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.
சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
