கனடாவில் இலங்கை குடும்பத்தை கொலை செய்த இளைஞருக்கு 25 வருட சிறைத்தண்டனை

#Canada #Murder #Prison #family #SriLankan
Prasu
2 hours ago
கனடாவில் இலங்கை குடும்பத்தை கொலை செய்த இளைஞருக்கு 25 வருட சிறைத்தண்டனை

கனடாவில் குழந்தைகள் உட்பட 6 பேரை ஈவிரக்கமின்றி கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரைக் கொலை செய்த சம்பவத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையை சேர்ந்த இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், தண்டனையில் எவ்விதமான தளர்வையும் பெறுவதற்கோ அல்லது விடுதலை பெறுவதற்கோ அவர் 25 ஆண்டுகள் கட்டாயமாகச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் ஃபெப்ரியோ டி சொய்சா என்ற இளைஞர் ஆவார். கனடாவில் கல்வி கற்று வந்த அவர், இந்த குற்றத்தைச் செய்தபோது 19 வயதைக் கடந்து இருந்தார்.

அவர் மீது நான்கு முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், இரண்டு இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன. அவர் அக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.

இந்தக் கொலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயான தர்ஷனி பண்டாரநாயக்க (35), இனூக்க விக்கிரமசிங்க (07), அஷ்வினி விக்கிரமசிங்க (04), ரினியானா விக்கிரமசிங்க (02), கெலி விக்கிரமசிங்க (02 மாதம்) ஆகியோர் கொல்லப்பட்டனர்.

மேலும், அந்த வீட்டில் இருந்த காமினி அமரகோன் (40) என்ற நபரும் கொல்லப்பட்டதுடன், குழந்தைகளின் தந்தை படுகாயமடைந்தார்.

images/content-image/1762499466.jpg

------------------------------------------------------------------------------------

A youth who mercilessly murdered 6 people, including children, in Canada has been sentenced to life imprisonment.

A Sri Lankan youth has been sentenced to life imprisonment for the murder of 6 people, including members of a Sri Lankan family, in a house in Ottawa, Canada, in 2024.

The court that issued the order said that he must serve a mandatory 25-year prison sentence in order to receive any relief from the sentence or be released.

The accused is a young man named Febrio de Soyza. He was studying in Canada and was over 19 years old when he committed the crime.

He was charged with four first-degree murder charges, two second-degree murder charges, and one attempted murder charge. He pleaded guilty to all the charges.

In this murder, the mother of the same family, Darshani Bandaranayake (35), Inuka Wickramasinghe (07), Ashwini Wickramasinghe (04), Riniyana Wickramasinghe (02), and Keli Wickramasinghe (02 months) were killed.

In addition, a person named Gamini Amarakoon (40) who was in the house was also killed and the father of the children was seriously injured.

------------------------------------------------------------------------------------

කැනඩාවේදී දරුවන් ඇතුළු පුද්ගලයින් 6 දෙනෙකු අනුකම්පා විරහිතව ඝාතනය කළ තරුණයෙකුට ජීවිතාන්තය දක්වා සිර දඬුවමක් නියම කර තිබේ.

2024 දී කැනඩාවේ ඔටාවා හි නිවසක ශ්‍රී ලාංකික පවුලක සාමාජිකයන් ඇතුළු පුද්ගලයින් 6 දෙනෙකු ඝාතනය කිරීම සම්බන්ධයෙන් ශ්‍රී ලාංකික තරුණයෙකුට ජීවිතාන්තය දක්වා සිර දඬුවමක් නියම කර තිබේ.

දඬුවමෙන් යම් සහනයක් ලබා ගැනීමට හෝ නිදහස් වීමට නම් ඔහු අනිවාර්ය වසර 25ක සිර දඬුවමක් විඳිය යුතු බව නියෝගය නිකුත් කළ අධිකරණය පැවසීය.

චූදිතයා ෆෙබ්‍රියෝ ද සොයිසා නම් තරුණයෙකි. ඔහු කැනඩාවේ අධ්‍යාපනය ලබමින් සිටි අතර අපරාධය සිදු කරන විට වයස අවුරුදු 19 ඉක්මවීය.

ඔහුට පළමු උපාධි මිනීමැරුම් චෝදනා හතරක්, දෙවන උපාධි මිනීමැරුම් චෝදනා දෙකක් සහ එක් මිනීමැරීමට තැත් කිරීමේ චෝදනාවක් යටතේ චෝදනා එල්ල විය. ඔහු සියලු චෝදනාවලට වරද පිළිගත්තේය.

මෙම ඝාතනයේදී, එකම පවුලේ මව වන දර්ශනී බණ්ඩාරනායක (35), ඉනුකා වික්‍රමසිංහ (07), අශ්විනි වික්‍රමසිංහ (04), රිනියානා වික්‍රමසිංහ (02), සහ කෙලී වික්‍රමසිංහ (මාස 02) මිය ගියහ.

ඊට අමතරව, නිවසේ සිටි ගාමිණී අමරකෝන් (40) නම් පුද්ගලයෙකු ද මිය ගිය අතර, දරුවන්ගේ පියා බරපතල තුවාල ලැබීය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!