கனடாவில் சட்டவிரோத வேட்டையில் ஈடுபட்ட நபருக்கு சிறை தண்டனை

கனடாவின் சஸ்கச்சுவானை சேர்ந்த எலியட் மீசான்ஸ் என்பவர் அனுமதியின்றி வேட்டையாடியமைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு 379 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு இரண்டு ஆண்டு மேற்பார்வைத் தண்டனையும் (probation), ஒரு ஆண்டு வாகன ஓட்டத் தடை மற்றும் மூன்று ஆண்டு வேட்டைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, 2024 அக்டோபரில் சஸ்கச்சுவான் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டது. வில்கி பகுதியில் சட்டவிரோத வேட்டை நடத்தப்படுகின்றது என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு வாகனத்தைச நிறுத்த முயற்சித்துள்ளனர்.
எனினும் வாகனம் தப்பிச் சென்றதால் பொலிஸாரின் உதவியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 2025 ஜூலை 31ம் திகதி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த சட்டவிரோத வேட்டை முயற்சியில் இணைந்து கொண்டமைக்காக அமெரிக்கப் பிரஜை ஓருவருக்கு 1400 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



