மன்னார் மாவட்ட செயலகத்தில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு!

#SriLanka #Mannar #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
2 hours ago
மன்னார் மாவட்ட செயலகத்தில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு!

மன்னாரில் காற்றாலை செயற்திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டமானது 24 நாளாக இன்றையதினம் இடம்பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

 இன்றையதினம் மன்னார் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம், மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிலையில்,போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் அரச அதிபர் உள்ளடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் ஒன்றை வழங்குவதற்கு மாவட்ட செயலகத்திற்குள் அமைதியான முறையில் நுழைந்த நிலையில் பொலிஸார் போராட்டகாரர்களை வெளியேற்ற முயற்சித்தனர். 

 இந்த நிலையில் போராட்டகாரர்கள் வெளியேற முடியாது என தெரிவித்த நிலையில் பொலிஸாருக்கு போராட்டகாரர்களுக்கும் முரண்பாடு இடம் பெற்றது. மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து போராட்டக்காரர்களை அமைதியான முறையில் மாவட்ட செயலகத்துக்குள் அனுமதித்திருந்தார். 

 நீண்ட இழுபறிக்கு பின்னர் போராட்டகாரர்கள் அபிவிருத்தி குழு உறுப்பினர்களையும் அபிவிருத்தி குழு தலைவரையும் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர் இன்றையதினம் அருட்தந்தை சக்த்திவேல் தலைமையில் அருட்தந்தை அருட்சகோதரிகள் கலந்து கொண்டு போராடத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!