எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து கடவுச்சீட்டு யாழ்ப்பாணத்தில் பெறலாம்!

#SriLanka #Passport #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
3 hours ago
எதிர்வரும் முதலாம்  திகதியிலிருந்து கடவுச்சீட்டு யாழ்ப்பாணத்தில் பெறலாம்!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

 70 மில்லியன் ரூபாய் செலவில் அலுவலக பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதியின் பின்னர் வடக்கு மாகாணத்திலுள்ள மக்கள் தமக்கான கடவுச் சீட்டுக்களை யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் புதிய அலுவலகத்தினுடாகப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார். 

 யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புதிய கடவுச்சீட்டு அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 அதற்கமைய, ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுடாக புதிய அலுவலகத்தில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!