பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே கைது!
#SriLanka
#Colombo
#Arrest
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
3 months ago
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேரை அநுராதபுரம் பொலிஸார் முன்னதாக கைது செய்திருந்தனர்.
இதனை அடுத்து தாம் பிரதி பொலிஸ்மா அதிபர் என்றும், தமது மனைவியை உடனடியாக விடுவிக்குமாறும் அநுராதபுரம் பொலிஸாருக்கு சந்தேநபர் தொலைபேசியில் அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்றைய தினம் சந்தேகநபரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
