உடனடியாக ரணிலை விடுதலை செய்ய வேண்டும்! எரிக் சொல்ஹொய்ம்

இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் நானும் இணைவதுடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹொய்ம் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவரது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் மேலும் உள்ளதாவது, விளக்கமறியலின் போது அவரது உடல்நிலை குறித்து நாம் அனைவரும் கவலைப்படுகிறோம்.
2022 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார மற்றும் அரசியல் குழப்பம் அடைந்தபோது இலங்கையைக் காப்பாற்ற எழுந்து நின்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை.
அவை உண்மையாக இருந்தாலும், ஐரோப்பாவில் அவை எந்தவொரு குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையையும் கொண்டிருக்காது .
ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு நான் முழு ஆதரவை வழங்குகிறேன், ஆனால் தயவுசெய்து உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள் என்று அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



