ரணிலிற்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி!

ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஜகத் வீரசிங்க "அத தெரண"விடம் தெரிவித்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபர் ரணில் விக்ரமசிங்கவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



