ரணிலிற்காக இணைந்த எதிர்க் கட்சிகள்! போராட்டத்திற்கும் சூளுரை

#SriLanka #Protest #Ranil wickremesinghe #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
3 hours ago
ரணிலிற்காக இணைந்த எதிர்க் கட்சிகள்!  போராட்டத்திற்கும் சூளுரை

நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக மீறல்களையும், அரசியல் பழிவாங்கல்களையும் இனியும் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை எனவும் சகல கட்சிகளுடனும் இணைந்து ஜனநாயக போராட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இன்று அவசர ஊடகவியலாளர் சந்திப்பை முன்னெடுத்திருந்தனர். இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தொடர்பில் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று ப்ளவர் வீதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 இந்த விவாதத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மற்றும் பிரதிநிதிகள் அல்லாத பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்த விசேட கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!