ரணிலின் கைதும் பின்னணியும்!

#SriLanka #Arrest #Ranil wickremesinghe #Lanka4
Mayoorikka
3 hours ago
ரணிலின்  கைதும் பின்னணியும்!

இலங்கையில் குற்ற விசாரணை பிரிவால் (சிஐடி) கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இந்த வழக்கில் சிஐடி தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பெய்ரிஸ் மற்றும் ரணில் விக்ரமசிங்க தரப்பில் வழக்கறிஞர் அனுஷா பிரேமரத்னே ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிலுபுலி லங்கபுரா, ரணிலை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

 ரணில் விக்ரமசிங்க அதிபராக இருந்தபோது அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 2023 ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சொந்த பயணமாக பிரிட்டன் சென்றதற்கு அரசு பணத்தை செலவு செய்ததாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

 இந்த வழக்கில் விசாரணைக்காக ஆகஸ்ட் 22 ஆம் தேதி(நேற்று) சிஐடியால் ரணில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் அளிக்க சிஐடி முன்பு ஆஜராகியிருந்தார் ரணில். அதன் பின்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிணை மனு மீதான உத்தரவு 30 நிமிடங்கள் தாமதமானது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ரணில் தாக்கல் செய்திருந்த பிணை மனு மீதான உத்தரவு அறிவிக்கப்படுவது அரை மணி நேரம தள்ளிவைக்கப்பட்டது.

 சிஐடி தரப்பில் ஆஜரான திலீபா பெய்ரிஸ், ரணில் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொதுச் சொத்து சட்டத்தின் (Public Property Act) கீழ் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார். ரணிலிடம் விசாரணை முடியாததால் காவலில் வைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

 ஆனால் ரணில் தரப்பில் ஆஜரான அனுஷா பிரேமரத்னே வழக்கின் விவரங்களைத் தெரிவித்து பிணையில் விடுமாறு வாதாடினார். இதனைத் தொடர்ந்து பிணை மனு மீதான உத்தரவு அரை மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். தகவல் அறியும் சுதந்திர சட்டத்தின் கீழ் பிபிசி சிங்கள சேவை கேட்டிருந்த கேள்விகளுக்கு ஜனாதிபதி செயலகம் பதிலளித்துள்ளது. 

 அதன்படி ஜூலை 20, 2022 முதல் செப்டம்பர் 23, 2024 வரை பதவியிலிருந்த ரணில் விக்ரமசிங்க 23 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டதாகவும் அந்த ஒவ்வொரு பயணம் தொடர்பாக தகவல்களை உறுதிசெய்வது இன்னும் முடிவடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் அரச நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. தனது மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு , அரச நிதியை பயன்படுத்தி விஜயம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.

 இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்திருந்தது. இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சென்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியிருந்தனர். ரணிலின் தந்தை எஸ்மண்ட் விக்ரமசிங்க, இலங்கை குடியுரிமை பணியில் மூத்த அதிகாரியாக இருந்தவர், பின்னர் டிஆர் விஜேவர்தனே காலகட்டத்தில் 'லேக் ஹவுஸ்' ஊடகத்தை நடத்தி வந்தார். ரணிலின் தாய் நளினி, விஜேவர்தனே மகள் ஆவார்.

 இளம் வயதில் சோசலிசவாதியாக இருந்த எஸ்மண்ட் பின்னர் 'லேக் ஹவுஸ்' நிர்வாகத்தை மட்டுமல்ல, ஐக்கிய தேசிய கட்சியின் (யூஎன்பி) அரசு அமைவதிலும் மறைமுக சக்தியாக செயல்பட்டார். இவரின் தந்தை நடத்தி வந்த 'எஸ்மண்ட் ஆபரேஷன்ஸ்' யூஎன்பியை தலைமையை மட்டுமல்ல நாட்டை ஆட்சி செய்பவர்களையும் தீர்மானித்து என்பது ரணிலுக்கு ரகசியமாக இருந்திருக்காது. ராயல் கல்லூரியில் பட்டம் பெற்ற ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். 

 1977 தேர்தலில் பியகாமா தொகுதியிலிருந்து இளம் எம்பியாக நாடாளுமன்றம் சென்றார். 28 வயதில் யூஎன்பியின் இளம் எம்பியாக தேர்வானார். அந்த தேர்தலில் யூஎன்பி கட்சி இமாலய வெற்றி பெற்றது. .ஆர்.ஜெயவர்த்தனே மற்றும் பிரேமதாசா அரசில் பல அமைச்சரவை பொறுப்புகளை வகித்தார். இவர் கல்வி அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட கல்வி பற்றிய வெள்ளை அறிக்கை பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது.

 ரணில் விக்ரமசிங்க ஆறு முறை பிரதமராகவும் ஆறு முறை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். 1993 ஆம் ஆண்டு முதல் முறை பிரதமராக பதவியேற்றார். அதன் பின்னர் கோத்தபயா ராஜபக்ஸ அதிபராக இருந்தபோதும், 2015-இல் இரு முறை மற்றும் 2018 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் பின்னர் 2022-இல் மகிந்த ராஜபக்ஸ பதவி விலகிய பிறகும் பிரதமராக இருந்தார் ரணில்.

 அதோடு 1994 - 2001 மற்றும் 2004 - 2015 இடையே ஆறு முறை எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளார். கோத்தபய ராஜபக்ஸ பதவி விலகியதைத் தொடர்ந்து ரணில் இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

 நன்றி!

 பிபிசி சிங்கள சேவை

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!