ரணில் விக்ரமசிங்கவுக்குப் பிணை வழங்க முடியாமைக்கான சட்ட காரணங்கள்!

ரணில் விக்ரமசிங்கவுக்குப் பிணை வழங்க முடியாமைக்கான சட்ட காரணங்கள் முன்னாள் ஜனாதிபதியின் பிணை மறுப்புத் தொடர்பான ஒரு சட்டப்பார்வை”
முதலில் பிணை என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.பிணை (Bail) என்பது குற்றவியல் நீதிமுறையின் ஒரு அங்கமாகும்.
குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவரை, நீதிமன்றம் நிர்ணயிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் தற்காலிகமாக விடுதலை செய்வதே பிணையின் நோக்கமாகும்.
ஆனால், சில குற்றங்களுக்கு பிணை வழங்க இயலாது என இலங்கை சட்டம் தெளிவாகக் கூறுகிறது.
இதுவே “Non-Bailable Offence” எனப்படுகின்றது. குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1979 (Code of Criminal Procedure Act, No. 15 of 1979) பிரிவு 14 மற்றும் 15 இல் bailable / non-bailable offences என பிரிக்கப்பட்டுள்ளது.
Public Property Act, No. 12 of 1982 பொதுச் சொத்து அல்லது அரச நிதி தொடர்பான மோசடி, குறிப்பாக ரூ. 25,000 ஐ மீறும் அளவில் ஏற்பட்டால், அது non-bailable offence ஆக கருதப்படும்.
இத்தகைய வழக்குகளில், நீதிமன்றம் “exceptional circumstances” இருந்தால் மட்டுமே பிணை வழங்கலாம்.
நீதிமன்றங்கள் பின்வரும் சூழல்களில் பிணை வழங்க மறுக்கின்றன:
●குற்றத்தின் தீவிர தன்மை கொலை, போதைப்பொருள் கடத்தல், ஆயுத குற்றங்கள், பெரியளவு அரச நிதி மோசடி.
●சாட்சிகளை பாதிக்கும் அபாயம் குற்றஞ்சாட்டப்பட்டவர் சாட்சிகளை அச்சுறுத்தினால் அல்லது சான்றுகளை அழித்துவிடும் அபாயம் இருந்தால்.
●தப்பிச் செல்லும் சாத்தியம் குற்றச்சாட்டின் தீவிரத்தால் குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தப்பி ஓடும் அபாயம்.
●பொதுநிதி தொடர்பான வழக்குகள் Public Property Act கீழ் அரச நிதி மோசடி வழக்குகள், குறிப்பாக அதிக தொகை தொடர்புடையவை.
சரி நாம் விடயத்துக்கு வருவோம் முன்னாள் ஜனாதிபதிக்கு பதவிக்காலத்தில் இருந்த Immunity (சட்டப் பாதுகாப்பு) முடிவடைந்துவிட்டது.
அதனால், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் போது, பொதுமக்களைப் போலவே சட்ட நடைமுறைகள் பொருந்தும்.
ஆனால், அரச நிதி 166 இலட்சம் ரூபா தனிப்பட்ட பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதால் இது Public Property Act கீழ் வரும் non-bailable offence ஆகும்.
நீதிமன்றம் “சிறப்பு காரணம் (exceptional circumstances)” காட்டப்பட்டால்தான் பிணை பரிசீலிக்க முடியும். நீதிமன்ற தீர்ப்புகள் (Case Law) AG v. Sirisena Cooray (1992) – Public Property Act கீழ் வழக்கில், “exceptional circumstances” இல்லாமல் பிணை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. Attorney General v. Punchibanda (1993) – பொதுநிதி மோசடி தொடர்பில், பிணை மறுக்கப்பட்டது.
இத்தீர்ப்புகள் Public Property Act வழக்குகளில் பிணைக்கு கடுமையான கட்டுப்பாடு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
இதனால், முன்னாள் ஜனாதிபதியாயினும், அரச நிதி மோசடி குற்றச்சாட்டில் சிக்கும்போது பிணை வழங்கப்படாமை என்பது சட்ட ரீதியாக முற்றிலும் சாத்தியமான ஒன்றாகும்.
நன்றி முகநூல்
Black Coat Gangsters
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



