கரைச்சி பிரதேச சபை மூன்றாவது அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.....

(2025.8.21) அன்று எடுக்கப்பட்ட தீர்மானங்களவன ...
1)"தொழில் பயிற்சி நிலையத்தை இராணுவத்தினரது ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்தல்" திரு.நா.செல்வநாயகம். ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உரிய தரப்புகளின் கவனத்திற்கு தீர்மானம் கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டது.
2) "மாற்றுத்திறனாளி வாழ்வாதாரத்தை ஊக்குவித்தல் - சிறு கைத்தொழில் நிலையங்களை உருவாக்கல்" திரு. கே.சசீலன். பிரேரணை வாழ்வாதாரத்தை ஊக்குவித்தல் என்பதை ஏற்றும் சிறுகைத்தொழில் நிலையங்களை உருவாக்கல் சபைக்கு சாத்தியமற்றது என்ற வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மாற்றுத்திறனாளிகளிற்கு 5% ஒதுக்கம் உறுதிப்படுத்தப்பட்டது.
3) "டிப்போ சந்தியில் இருந்து பாரதிபுரம் வரையான புகையிரத வீதிக்கு சமாந்தர வீதியை உருவாக்கல்" தவிசாளர் அ.வேழமாலிகிதன். சபை ஏகமனதாக ஏற்றுகொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
4) "ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபார நிலையங்களை மூடுதல்" திரு. க. ஆனந்தவடிவேல். அத்தியாவசிய சேவை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மூடுதல் என சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.தொழில் தினைக்களம் மற்றும் வர்த்தக சங்கங்களுடன் கலந்துரையாடி நடைமுறைப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
5) "சர்வதேச நீதிகோரல் - செம்மணி புதைகுழி" திரு. பா. எழில் வேந்தன். ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உரிய இடங்களிற்கு பிரேரணை அனுப்புவதாக அறிவிக்கப்பட்டது.
6) "இன அழிப்புக்கு நீதி கோரல்" திரு.ச. சுதர்சன். ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரு பிரேரணைகளும் ஒரே விடயம் என அறிவிக்கப்பட்டது.
7). "கழிவகற்றல் மற்றும் சுகாதார முகாமைத்துவ செயற்பாடுகளை வெளிப்படுத்தல் " திரு. மு. சிவமோகன்
ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிரேரணை சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



