ரணில் கைது செய்யப்பட்ட விடயம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது - ரவூப் ஹக்கீம் கூறுகிறார்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயலாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அதனாலே யூடியுப் அலைவரிசையாளர் ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்படுவார் என ஏற்கனவே அறிவித்திருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் இன்று (நேற்று) கைது செய்யப்படுவது யூடியுப் அலைவரிசையாளர் ஒருவர் அறிந்துள்ளார்.அவருக்கு இது எப்படி தெரியும்.
அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் அவருக்கு சில துப்புகளை கொடுத்திருக்கலாம். இதுதானா அரசாங்கத்தின் புதிய கலாசாரமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



