கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ள மலசல கூடத்தின் அவல நிலை!
#SriLanka
#Kilinochchi
#Hospital
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
2 hours ago

கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ள பொது மக்கள் பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மலசல கூடம் பாவனைக்கு உகந்த நிலையில் சுகாதாரமற்று காணப்படுவதாக அங்கு சென்றவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இந்த நிலை காணப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சுகாதாரத்தை பேணும் வைத்தியசாலையில் கூட இந்த நிலை காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் உள்ள மாலசல கூடத்தினை வைத்தியசாலை பொறுப்பாளர் கண்டும் காணாதவாறு உள்ளாரா அல்லது கண்டு கொள்ளவில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பல மாதங்களாக இப்படியே இருப்பதை வைத்தியசாலை பொறுப்பாளர் கண்டுகொள்ளவில்லையா? இது வெறும் சொற்பமே மேலும் பல அவலம் சுகாதாரத்தை பேணும் வைத்தியசாலையில் உள்ளது.
விரைவில் அனைத்தும் வெளி வரும்.
திருத்த வைப்போம்.
லங்கா4 ஊடகம்.



