தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தலிற்கு எதிராக கொழும்பில் போராட்டம்
#SriLanka
#Protest
#Lanka4
#Journalist
#SHELVAFLY
Mayoorikka
2 hours ago

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தது. முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கடந்த 17ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சுமார் 7 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
இதனை கண்டித்தும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்தும் இப்போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டார்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



