நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரான ரணில்!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
3 months ago
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பான விசாரணைக்காக இவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
