கனடா இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர்

#Election #Canada #Opposition #leader
Prasu
2 hours ago
கனடா இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர்

கனடிய எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் இடைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார். அல்பேர்ட்டா மாகாணத்தின் பேடல் ரிவர் க்ரோவ்புட் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பொலியேவ் வெற்றியீட்டியுள்ளார்.]

இடைத் தேர்தலில் பொலியேவ் 80 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அமோக வெற்றியீட்டியுள்ளார். அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொலியேவ் எதிர்பாராதவிதமாக தோல்வியைத் தழுவியிருந்தார். 

இந்த நிலையில் இடைத் தேர்தலில் வெற்றியீட்டி மீண்டும் நாடாளுமன்றம் தெரிவாகியுள்ளார். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக பொலியேவ் கடமையாற்றி வருகின்றார். 

கடந்த 2004ம் ஆண்டு ஒன்றாரியோவின் கார்ல்டன் தொகுதியில் போட்டியிட்டு பொலியேவ் முதல் தடவையாக வெற்றியீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொலியேவ் நாடாளுமன்றில் கொன்சர்வேட்டிவ் கட்சியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!