ஏர் கனடா விமான பணியாளர்கள் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது - மீண்டும் பணிக்குத் திரும்ப உத்தரவு

கனடாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஏர் கனடா விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது கனடா தொழில்துறை உறவுகள் வாரியம்.
ஏர் கனடா நிறுவனத்தின் விமானப் பணியாளர்கள் 10,000க்கும் அதிகமானோர் தங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊதியம் தொடர்பில் ஏர் கனடா நிறுவனத்துக்கும் பணியாளர் யூனியனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த வேலைநிறுத்தத்தால், நாளொன்றிற்கு 130,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில், வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள கனேடியர்களும் அடங்குவர்.
இந்நிலையில், ஏர் கனடா விமானப் பணியாளர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூறியுள்ள கனடா தொழில்துறை உறவுகள் வாரியம், ஏர் கனடா விமானப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப உத்தரவிட்டுள்ளது.
கனடா தொழில்துறை உறவுகள் வாரியம் என்பது, ஒழுங்குபடுத்தப்பட்ட அரசுப் பணியிடங்களில், தொழிலாளர், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புச் சட்டங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் புகார்கள், விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகளைக் கேட்டு முடிவு செய்யும் ஒரு சுயாதீன தீர்ப்பாயமாகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



