இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக முடியுமா? (வீடியோ இணைப்பு)

இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக முடியுமா?
ஒவ்வொரு முறை ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது.. தமிழ் மக்களிடையே ஏதோ ஒரு வகையில், ஒரு கேள்வி, மீண்டும் மீண்டும் மீண்டெழுந்து விடுகிறது.
இலங்கையில் தமிழரொருவர் ஜனாதிபதியாக முடியாதா? சிங்களப் பௌத்தர் ஒருவரே ஜனாதிபதியாக முடியும் என்ற தொனியிலான இந்தக் கருத்து, என்ன காரணத்தாலோ, மிக ஆழமாகப் பல தமிழர்களின் மனங்களில் பதிந்திருக்கிறது.
சட்ட ரீதியாகத் தமிழர் ஒருவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கோ, ஜனாதிபதி ஆவதற்கோ வௌிப்படையாகச் சட்டத்தில், இலங்கையின் அரசமைப்பின் படி, தடைகள் எதுவுமில்லை. இந்த விடயம், எத்தனை தடவை மீள எடுத்துரைக்கப்பட்டாலும் தமிழர் ஜனாதிபதியாக முடியாது என்ற கருத்துத் தொடர்ந்தும் பல தமிழர்களின் மனங்களில் நீடித்திருக்கவே செய்கிறது.
ஆகவே, சட்டரீதியாக மட்டுமன்றி, அரசியல், சமூக ரீதியாகவும் இந்தக் கேள்வியை அணுகவேண்டியது அவசியமாகிறது. இலங்கை ஒரு ஜனநாயகக் குடியரசு என்றால், இங்குள்ள மக்கள் அனைவரும் சமம் என்றால், இங்குள்ள சிறுபான்மை இனமொன்றுக்குத் தம்மால் ஒருபோதும் இந்த நாட்டின் தலைமைப் பதவியை வகிக்க முடியாது என்ற இரண்டாந்தரப் பிரஜையைப் போன்ற மனநிலை உருவாக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இது, இலங்கை என்ற ஜனநாயகக் குடியரசுக் கட்டமைப்பில், அடிப்படைக் கோளாறொன்று இருப்பதையே கோடிட்டுக்காட்டி நிற்கிறது.
முழுமையான வீடியோவை பார்வையிட லிங்கை கிளிக் செய்யவும்>>> https://www.youtube.com/watch?v=O_Zv5m_PnWU&t=321s



