கடைகளை மூடாவிட்டால் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும்! மட்டக்களப்பில் மிரட்டல்

தமிழரசு கட்சி உறுப்பினரான மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், காலையில் திறக்கப்பட்ட சில கடைகளை மூடுமாறு கூறிய நிலையில் அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கடைகளை திறக்குமாறு குறிப்பிட்ட நிலையில், அவர்களுக்கும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடைகளை பூட்டாவிட்டால் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வேன் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் மிரட்டல் விடுத்து கடைகளை பூட்ட வைத்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதேவேளைகரவெட்டி பிரதேசசபையினர், நெல்லியடி நகர வர்த்தக நிலையங்களை பூட்டுமாறு நேற்று மாலை அறிவித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். பிரதேசசபையுடன் முரண்பட்டால் வர்த்தகத்தில் நெருக்கடியை சந்திக்க வேண்டுமென்பதால் காலையில் சிறிது நேரம் கடைகளை பூட்டியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அதையும் மீறி திறந்திருந்த கடைகளிற்கு சென்ற இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள், கடைகளை பூட்டுமாறு மிரட்டியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



