கடையடைப்பு தொடர்பாக மட்டகளப்பில் சர்ச்சை !

மட்டக்களப்பு நகரை தவிர்த்த ஏனைய பிரதேசங்களில் காலையில் வழமை போன்று கடைகள் திறக்கப்பட்டு இயங்கியுள்ளன. இந்நிலையில் கடைகளை மூடுமாறு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதேநேரம், அங்கிருந்த தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கடைகளை திறக்குமாறு குறிப்பிட்ட நிலையில், அவர்களுக்கும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழரசு கட்சி உறுப்பினரான மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், காலையில் திறக்கப்பட்ட சில கடைகளை மூடுமாறு கூறிய நிலையில் அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, மட்டக்களப்பு நகரில் காலை ஒரு சில கடைகளை தவிர ஏனைய கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், மாநகர சபை எல்லைக்குட்பட்ட சந்தைக்கட்டிடம் பூட்டப்பட்டுள்ளது.
வடக்கு - கிழக்கு தழுவிய கதவடைப்பு நடவடிக்கையில் மட்டக்களப்பில் பெருமளவு ஆதரவு வழங்கப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



