அம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த பலர் கைது!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை (16) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைதான சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 5 கிராம் 10 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 50 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 10 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், பெண் சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 950 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



