நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதிக்கு அருகாமையில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் கைது!

#SriLanka #Nallur #Attack #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
1 hour ago
நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதிக்கு அருகாமையில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் கைது!

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். 

 நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழா நேற்று சனிக்கிழமை (16) இடம்பெற்ற நிலையில், ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். 

 இந்நிலையில், கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகாமையில் உள்ள அரசடி பகுதியில், பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியது.

 தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வீதி தடையை தாண்டி நல்லூர் ஆலய சூழலை நோக்கி தப்பியோடிய போதும் , தாக்குதலாளிகள் வாளுடன் இளைஞனை துரத்தி சென்று தாக்குதல் நடாத்த முற்பட்டனர். 

 இந்நிலையில் ஆலய சூழலில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் விரைந்து செயற்பட்டு ஐவரை கைது செய்துள்ளனர். 

 அதேவேளை தாக்குதலில் காயமடைந்த இளைஞனை காப்பற்றப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!