சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்கேற்கும் கிண்ணியா மாணவன்
#SriLanka
#School
#Student
#International
#football
#Kinniya
Prasu
2 hours ago

இலங்கை பாடசாலைகள் 17 வயது உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டு, சர்வதேச போட்டியில் பங்கேற்கும் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார் கிண்ணியா அல் அமீன் மகா வித்தியாலய மாணவர் A. M. அபாஸ்.
வரும் செப்டம்பர் மாதம் இந்தியா, புது டில்லியில் நடைபெறவுள்ள Subroto கிண்ணம் போட்டிக்கான இலங்கை 17 வயது தேசிய பாடசாலை உதைபந்தாட்ட குழுவில் இடம்பிடித்துள்ளார்.
குறிப்பிடத்தக்கது என்னவெனில், கிண்ணியா அல் அமீன் மகா வித்தியாலயத்திலிருந்து சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்கும் நான்காவது வீரர் என்பதும், இது கல்லூரிக்கும் கிண்ணியா பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



