சுதந்திர தினத்தில் கருப்பு பேட்ச் அணிந்து ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

#SriLanka #Fisherman #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Soruban
3 months ago
சுதந்திர தினத்தில் கருப்பு பேட்ச் அணிந்து ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து தொடர்ச்சியாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் ஏழு விசைப்படகுகளும், ஒரு நாட்டுப்படகு உட்பட 57 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது இதனை அடுத்து கடந்த 11ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதோடு மட்டுமல்லாது நேரடியாக மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இதனை அடுத்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி சுதந்திர தினத்தில் மீனவர்கள் தங்களுடைய சட்டைகளின் கருப்பு பேச்ச அணிந்து ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசு எதிராக மீனவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர் .. இந்தப் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.. சுதந்திர தினத்தில் கருப்பு பேட்ச் அணிந்து ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை