அன்று ஆடை தொழிற்துறையை கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று கஞ்சா செய்கையை ஊக்குவிக்கின்றனர்!

#SriLanka #Sajith Premadasa #government #AnuraKumaraDissanayake #NPP
Lanka4
3 hours ago
அன்று ஆடை தொழிற்துறையை கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று கஞ்சா செய்கையை ஊக்குவிக்கின்றனர்!

ரணசிங்க பிரேமதாச தூர நோக்கோடு ஆடைத் தொழிலை உற்பத்தித் தொழிலாக மேம்படுத்தினார். தற்போதைய அரநு கஞ்சா செய்கைக்கு சட்ட ரீதியிலான அனுமதியை வழங்கி அதனை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மீதான 50 ரூபா விசேட பெறுமதி சேர் வரியை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையைக் குறைப்பதாக இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் கூறியிருந்தனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 884 பில்லியன் டொலர்களை தற்போது கடனாக செலுத்த வேண்டியுள்ளது.

எனவே டீசல் மற்றும் பெட்ரோலுக்கு 50 ரூபா வரி விதிக்கிறோம் என்று விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அண்மையில் தெரிவித்தார்.

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில் எரிபொருளை மக்களுக்கு பெற்றுத் தருவோம் என்று தேர்தல் காலங்களில் ஆளும் தரப்பினர் பிரஸ்தாபித்தனர்.

ஆனால் தெளிவான அதிகாரத்தை வைத்துக் கொண்டும் அரசாங்கத்தால் இதுவரையில் எதனையுமே செய்ய முடியாதுபோயுள்ளது.

ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, கடுமையாக விமர்சித்தனர்.

இன்று, இந்த ஆளும் தரப்பினர் 7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கஞ்சா செய்கையில் ஈடுபட சட்ட ரீதியான அனுமதிகளை வழங்கியுள்ளனர்.

அன்று ஆடைத் தொழில் உற்பத்தித் தொழிலாக மேம்படுத்தப்பட்டது. இன்று 7 திட்டங்களின் கீழ் 64 ஏக்கர் கஞ்சா செய்கைக்காக சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!