யாழ் சர்வதேச புத்தகத் திருவிழா இன்று ஆரம்பம்!
#SriLanka
#Jaffna
#Festival
#books
Lanka4
2 hours ago

தொழில்துறை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் - சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகவுள்ளது.
அதற்கமைய, இன்று (15) முதல் நாளை மறுதினம் (17) வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
இம்முறையும் நாடு முழுவதிலுமிருந்து பல முன்னணி புத்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளன.
சிறந்த தரம் வாய்ந்த புத்தகங்கள், பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு விலைக்கழிவுகளுடன் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளன.
சர்வதேச புத்தகத் திருவிழாவில் பல்வேறு அறிவுசார் மற்றும் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .சர்வதேச புத்தகத் திருவிழா இம்முறை இரண்டாவது தடவையாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



