மின்னேரியா, பது ஓயாவில் வாகன விபத்து - 26 பேர் படுகாயம்!
#SriLanka
#Batticaloa
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில் மின்னேரியா, பது ஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மொத்தம் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, இன்று (12) அதிகாலை 3:00 மணியளவில் மதுரோயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து எதிர் திசையில் சென்ற டிப்பர் லாரியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
