லெபனானில் ஆயுதக் கிடங்கில் நடந்த வெடி விபத்தில் 6 ராணுவ நிபுணர்கள் உயிரிழப்பு

#Death #BombBlast #Expert #Military #Lebanon
Prasu
3 hours ago
லெபனானில் ஆயுதக் கிடங்கில் நடந்த வெடி விபத்தில் 6 ராணுவ நிபுணர்கள் உயிரிழப்பு

லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்களை அகற்றும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் 6 ராணுவ நிபுணர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 14 மாதங்களாக இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வந்தது. கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக லெபனான் ராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படை ஹிஸ்புல்லாவின் நிலைகளை கைப்பற்றி வருகிறது.

குறிப்பாக லிடானி ஆற்றுப் பகுதியின் தெற்குப் பகுதியில், ஹிஸ்புல்லா திரும்பிய பகுதியில் பல ஆயுதக் கிடங்குகள் உள்ளன. ஆயுதக் கிடங்கில் உள்ள வெடிப்பொருட்களை லெபனான் ராணுவம் அப்புறப்படுத்தி வருகிறது. 

அவ்வாறு தைரே மாகாணத்தில் உள்ள ஜிப்கின் கிராமத்தில் இன்று ஆயுதக் கிடக்கில் உள்ள ஆயுதங்களை அப்புறப்படுத்தியபோது, திடீரென வெடிப்பொருட்கள் வெடித்து சிதறின. இதில் 6 ராணுவ நிபுணர்கள் உயிரிழந்தனர். பல காயம் அடைந்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!