இராணுவ முகாமிற்கு சென்று மாயமாகிய இளைஞர் சடலமாக மீட்பு - சகோதரர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

இராணுவ முகாமிற்கு சென்ற நிலையில் மாயமாகியிருந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று (09.08) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து நேற்று முன்தினம் (07.08.2025) இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள் .
இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுவம் ஒருவரால் தாெலைபேசியில் கூறப்பட்டுள்ளது.
அதனையடுத்து நேற்றுமுன்தினம் இரவு ஐவர் சென்றுள்ளனர். இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் தாக்கியதாக தெரியவருகிறது.
அதனால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து நேற்றையதினம் இராணுவ முகாமிற்கு வந்த இராணுவ வாகனம் வீதியில் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
மாயமாகிய குறித்த இளைஞர் தப்பி ஒடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி வலை விட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டும் நேற்று இரவுவரை குறித்த நபர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் காணாமல் போன இளைஞனின் சகோதரரால் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சகோதரர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் தனது தம்பியை அடித்து கொலை செய்து விட்டு இன்றையதினம் அதிகாலை குளத்தில் போட்டுள்ளதாக இறந்தவரின் அண்ணா மற்றும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



