முள்ளியவளை பொலிஸார் அராஜகம் !
#SriLanka
#Police
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
3 months ago
முள்ளியவளை பொலிஸாரால் தாய் மற்றும் 10 வயதான மகள் ஆகியோர், அராஜகமாக வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தவபாலன் ஜெயரஞ்சினி என்ற குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் சுவிஸ்லாந்தில் குடியுரிமை பெற்று வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு சொந்தமான வீட்டில் குறித்த பெண் தற்காலிகமாக வசித்து வருகின்றார்.
குறித்த பெண்ணையும், அவரது மகளையும் 3 நாட்களாக வீட்டினுள் பூட்டி வைத்திருந்த முள்ளியவளை பொலிஸார், கடந்த புதன்கிழமை நள்ளிரவன்று வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
அவரது நகை, பணம் உட்பட உடமைகள் அனைத்தையும் பறித்து வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு பின் பெண்ணையும், அவரது மகளையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
