நல்லூர் ஆலயத்திற்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
#SriLanka
#Police
#Temple
#Nallur
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
4 hours ago

இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நகைகளை திருடுவதற்கு நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆலய சூழலில் திருடர்களின் நடமாட்டம் காணப்படுவதால், ஆலயத்திற்கு தங்க நகைகளை அணிந்து வருவதை தவிர்க்குமாறும், அணிந்துள்ள தங்க நகைகளில் கவனம் செலுத்துமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
அத்துடன், பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸார் ஆலய சூழல்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும், அருகில் உள்ளவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்தால், பொலிஸாருக்கு உடன் அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை ஆலய சூழல்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



