யாழ் - சுன்னாகத்தில் 500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

#SriLanka #Jaffna #Arrest #drugs
Prasu
3 hours ago
யாழ் - சுன்னாகத்தில் 500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸார் நேற்று இரவு சுன்னாகம் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 500 போதை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

யாழ். பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் இயங்கும் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போதை மாத்திரைகளை விற்பனைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!