கனடாவில் அதிகரிக்கும் தட்டம்மை நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை

#Canada #people #Disease #Warning #Measles
Prasu
5 hours ago
கனடாவில் அதிகரிக்கும் தட்டம்மை நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை

உலகில் தட்டம்மை நோயை கட்டுப்படுத்திய நாடுகளின் வரிசையில் இடம்பெற்றுள்ள கனடா அந்த அந்தஸ்தினை இழக்கக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.

அண்மைய நாட்களாக கனடாவில் தட்டம்மை நோய் பரவுகை தொடர்பிலான பல்வேறு தகவல்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் நியூபிரவுன்ஸ்விக் பகுதியில் முதலில் தட்டம்மை நோயாளி பதிவாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பல்வேறு நோயாளிகள் பதிவாகியிருந்தனர்.

தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளின் வரிசையில் கனடா 1998ம் ஆண்டு இடம்பிடித்திருந்தது. கடந்த 2024ம் ஆண்டுக்கு முன்னதாக வருடாந்தம் சராசரியாக 91 பேர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

எனினும் கடந்த ஆண்டு முதல் தட்டம்மை நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றது. குறிப்பாக கடந்த ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 4394 பேர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754551235.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!