மெக்ஸிக்கோவிற்கு விஜயம் செய்துள்ள கனடிய வெளிவிவகார மற்றும் நிதி அமைச்சர்கள்

அமெரிக்காவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மெக்ஸிக்கோவுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள கனடா முனைப்பு காட்டி வருகின்றது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் நிதி அமைச்சர் பிரான்ஸ்வா-பிலிப் ஷாம்பெய்ன் ஆகியோர் மெக்ஸிக்கோவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
ஆனந்த் மற்றும் ஷாம்பெய்ன், மெக்ஸிகோ ஜனாதிபதி கிளாடியா ஷைன்பாமுடனும் ஏனைய முக்கியஸ்தர்களுடனும் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
கனடாவும் மெக்ஸிகோவும் துறைமுகங்களுக்கு இடையிலான வர்த்தகப் பாதைகள், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு பணித் திட்டத்தை உருவாக்க இணங்கப்பட்டுள்ளதாக அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மற்றும் ஷாம்பெய்ன் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ஷைன்பாமை சந்தித்ததுடன், இன்றைய தினம் வணிகத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அமெரிக்கா கனடா மீது தொடர்ச்சியாக வரிகளை அதிகரித்து வரும் பின்னணியில் மெக்ஸிக்கோவுடன் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள கனடா தீவிர முனைப்பு காட்டி வருகின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



