காசாவிற்குள் வான்வழி மனிதாபிமான உதவிகளை வழங்கிய கனடா
#Canada
#people
#Food
#Aid
#Gaza
Prasu
4 months ago
பட்டினியை எதிர்கொண்டுள்ள அதன்படி காசாவிற்கு கனடா, 21600 பவுண்ட் மனிதாபிமான உதவிகளை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கனடாவின் ஆயுதப்படையினர் தங்கள் விமானங்களை பயன்படுத்தி முதல்தடவையாக காசாவுக்குள் மனிதாபிமான பொருட்களை போட்டுள்ளனர் என கனடா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
காசாவிற்குள் வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ள கனடா இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
சிசி - 130 ஜே ஹேர்குலிஸ் விமானத்தை பயன்படுத்தி கனடாவின் ஆயுதப்படையினர் காசாவுக்குள் மனிதாபிமான உதவி பொருட்களை போட்டதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கனடா மற்றும் எகிப்து உட்பட ஆறுநாடுகள் 120 உணவுப்பொதிகளை காசாவிற்குள் வீசியுள்ளன என எகிப்து தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
