கனடாவில் சிறுவர் விளையாட்டுப் பொருள் குறித்து எச்சரிக்கை விடுப்பு

கனடாவிலும் அமெரிக்காவிலும் விற்பனை செய்யப்பட்ட கிட்கிராஃப்ட் ஃபார்ம் டு டேபிள் மாடல் (மாடல் எண் 53411) என்ற குழந்தைகளுக்கான விளையாட்டு சமையலறை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓரிகனில் 23 மாத குழந்தையொன்று உயிரிழந்ததை அடுத்து இந்த விளையாட்டுப் பொருள் மீளப் பெற்றுக்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் ஆடை, சமையலறையின் பின்புறத்தில் உள்ள திறப்பு வழியாக ஏறி விளையாடும்போது, உலோக கொக்கியில் சிக்கியதால், மூச்சுத் திணறல் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், சமையலறை சுவரில் பாதுகாப்பாக பொருத்தப்படாததால், சுவருக்கும் சமையலறைக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டு, குழந்தை ஏறி ஆடை கொக்கியில் சிக்கியதால் நிகழ்ந்தது.
கனடாவில் சுமார் 5,800 விளையாட்டு உபகரணங்களும், அமெரிக்காவில் சுமார் 192,000 உபகரணங்களும் 2018 முதல் 2023 வரை விற்பனையாகியுள்ளன. இந்த சமையலறைகள் முதலில் கிட்கிராஃப்ட், இன்க். நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டு, மே 2024 வரை விநியோகிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இந்த விளையாட்டு உபகரணம் காரணமாக கனடாவில் எந்த காயங்களும் பதிவாகவில்லை எனவும் மேலும் அமெரிக்காவில் இந்த ஒரு சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்துவதனை நிறுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



